ADDED : செப் 09, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக கிராமங்கள் உள்ள யூனியனாக எருமப்பட்டி உள்ளது. இந்த யூனியன், திருச்சி மாவட்ட எல்லை, துறையூர் மாவட்ட எல்லையை இணைக்கும் பகுதியாக உள்ளதால், அதிக கிராமங்கள் உள்ளன.
கடந்த, 1960ல் சிறிய கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. நாமக்கல், சேந்தமங்கலம், பின்னர் நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷன்களின் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு பொறுப்பு இன்ஸ்பெக்டர்களாக, 65 ஆண்டுகள் பணியாற்றி வந்தனர். கடந்த, 2008ல் இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சில மாதம் காலம் பணியாற்றிய நிலையில், அவர் மாற்றப்பட்டார். அதன் பின் பொறுப்பு இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர்.
தற்போது எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு என, தனியாக தவுலத் நிஷா என்ற முதல் பெண் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.