/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சந்தையில் மாடு வாங்கும் போது நோய் அறிகுறி உள்ளதா என கவனித்து வாங்க அறிவுறுத்தல்
/
சந்தையில் மாடு வாங்கும் போது நோய் அறிகுறி உள்ளதா என கவனித்து வாங்க அறிவுறுத்தல்
சந்தையில் மாடு வாங்கும் போது நோய் அறிகுறி உள்ளதா என கவனித்து வாங்க அறிவுறுத்தல்
சந்தையில் மாடு வாங்கும் போது நோய் அறிகுறி உள்ளதா என கவனித்து வாங்க அறிவுறுத்தல்
ADDED : டிச 29, 2024 01:31 AM
சந்தையில் மாடு வாங்கும் போது நோய் அறிகுறிஉள்ளதா என கவனித்து வாங்க அறிவுறுத்தல்
நாமக்கல், டிச. 29-
'புதிதாக சந்தையிலிருந்து மாடுகள் வாங்கும் போது, நோய் அறிகுறி உள்ளதா என நன்கு கவனித்து வாங்க வேண்டும்' என, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் வானிலை ஆலோசனை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தின் கடந்த வார வானிலையில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவு முறையே, 84.2 டிகிரியாகவும் மற்றும் 64.40 டிகிரியாகவும் நிலவியது. மாவட்டத்தில் சில இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாட்களில் வானம் பெரும்பாலும் சிதறிய மேகங்களுடன் பல இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
தொடர்ந்து அடிக்கடி பெய்து வரும் மழை, காற்றின் வேகம், ஈரப்பதம் மற்றும் வெப்பம் காரணமாக கால்நடைகளை தாக்கும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழலில் மாடுகளைத் தாக்கும் தோல் கழலை நோய், பெரியம்மை நோய் எனும் நச்சுயிரி நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை கடித்த கொசு, கடிக்கும் ஈக்கள் மற்றும் உண்ணிகள் மற்ற மாடுகளை கடிக்கும் போது மற்ற கால்நடைகளுக்கு எளிதாக பரவும்.
பாதிக்கப்பட்ட மாடுகளில் 2 -அல்லது 3 நாட்களுக்கு லேசான காய்ச்சல், அதன் பின் தோலுக்கு அடியில் சிறிய கழலை போன்ற கட்டிகளும் காணப்படும். மேலும் வாய், மூச்சுக்குழல், உணவுக்குழலும், நெரிக்கட்டுதல், கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், சினைபிடிக்காமை, கரு சிதைவு போன்ற அறிகுறிகள் தென்படும். சில நேரங்களில் கால்நடைகள் இறக்க நேரிடும்.
நோய் வராமல் தடுக்க கொசு, கடிக்கும் பூச்சிகள் மற்றும் உண்ணிகளின் எண்ணிக்கையை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக சந்தையிலிருந்து மாடுகள் வாங்கும் போது, நோய் அறிகுறி உள்ளதா என நன்கு கவனித்து வாங்க வேண்டும். வாங்கிய பின் குறிப்பிட்ட காலத்திற்கு மாடுகளை தனிமைப்படுத்தி வைத்து பின் மந்தையில் சேர்க்கவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.