/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
/
டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ADDED : ஜூலை 25, 2024 01:26 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 2வது வார்டு பகுதியில், கலெக்டர் உமா, திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, வீடு வீடாக சென்று குடிநீர் பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவைகளை சோதனையிட்டார். பின், தினந்தோறும் வீடு வீடாக சென்று மருந்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் என, துப்புரவு பணியாளர்களுக்கு உத்தர-விட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ''பருவமழை காலம் வரக்கூடிய நிலையில், கொசு ஒழிப்பு பணியாளர்களாக யூனியன் பகுதியில், 20 பேர், டவுன் பஞ்., பகுதியில், 10 பேர், நகராட்சி பகுதியில், வார்டிற்கு தேவையான பணியாளர்களை அமர்த்த அறி-வுறுத்தப்பட்டுள்ளது.ராசிபுரம் யூனியன் பகுதியில், காய்ச்சல் உள்நோயாளிகள் சற்று அதிகம் இருப்பதால், திடீர் சோதனை நடத்தப்பட்டது. கடந்த வாரத்தில், 2 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்,'' என்றார்.