/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்
/
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்
ADDED : நவ 08, 2024 01:28 AM
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்
பள்ளிப்பாளையம், நவ. 8-
பள்ளிப்பாளையம் யூனியனில், 15 பஞ்., பகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை விவசாயம் நிறைந்தவை. மேலும் ஏராளமானவர்கள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, பஞ்., பகுதிகளில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. குறிப்பாக சவுதாபுரம் பஞ்., பகுதியில் நாய்கள் கடித்து நான்கு மாடுகள் இரண்டு வாரத்திற்கு முன் இறந்துள்ளது. மேலும் நாய் கடியால் பல ஆடு, மாடுகள் பலத்த காயமடைந்துள்ளன. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாய் தொல்லையால் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். நாளுக்குநாள் நாய் தொல்லை அதிகரித்து வருவதால், இதனை கட்டுப்படுத்த வேண்டும் என, மக்களும், கால்நடை வளர்ப்பவர்களும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள், யூனியன் பகுதியில் உள்ள நாய்களை கணக்கெடுக்கும் பணியில்
ஈடுபட்டு உள்ளனர்.