/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பு பகுதியில் துாய்மை பணி தீவிரம்
/
குடியிருப்பு பகுதியில் துாய்மை பணி தீவிரம்
ADDED : அக் 18, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: தொடர்ந்து மழை பெய்ததால், பள்ளிப்பாளையம் குடியிருப்பு பகுதியில் துாய்மை பணி நடந்து வருகிறது.
தொடர் மழையால், பள்ளிப்பாளைம் குடியிருப்பு பகுதியில் புற்கள் அதிகளவு வளர்ந்து காணப்படுகிறது. இந்த புற்கள் உள்ள பகுதியில் பூச்சிகள் அதிகளவு வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரால் சுகாதார கேடும் ஏற்படுகிறது. நேற்று நகராட்சி துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் வளர்ந்துள்ள புற்களை அகற்றினர், மேலும் குடியிருப்பு பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.