/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் மீன் பிடிக்கும் பணி தீவிரம்
/
தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் மீன் பிடிக்கும் பணி தீவிரம்
தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் மீன் பிடிக்கும் பணி தீவிரம்
தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் மீன் பிடிக்கும் பணி தீவிரம்
ADDED : அக் 17, 2024 01:15 AM
தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் மீன் பிடிக்கும் பணி தீவிரம்
பள்ளிப்பாளையம், அக். 17-
ஓடப்பள்ளி தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில் மீன் பிடிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, இந்த தடுப்பணையின் நீர் தேக்கம் பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்தி நடக்கும். மேலும் நீர் தேக்கம் பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கும் போது, மீன் வளம் அதிகரித்து காணப்படும். இதனால் மீன் பிடிப்பு பணியும் அதிகளவு நடக்கும்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கம் பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிப்பாளையம் பகுதியில், 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பர்.
இது குறித்து ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களாக ஓடப்பள்ளி தடுப்பணை நீர் தேக்கத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மீன் வளம் அதிகரித்து காணப்படுகிறது. பெரியளவு மீன்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடுகிறது. வலை போட்டாலும் மீன்கள் கிடைக்காது. தண்ணீர் குறையும் போது பெரிய மீன்கள் அதிகளவு கிடைக்கும்.
இவ்வாறு கூறினர்.