ADDED : செப் 11, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையத்தில், ஆலாம்பளையம், எலந்தகுட்டை, சமயசங்கிலி, மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சவுதாபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் விவசாயம் நிறைந்தவை.
பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, காய்கறி, தானிய வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருத்தி சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, ஆலாம்பாளையம் பகுதியில் பருத்தி சாகுபடி செய்த விவசாயி கூறுகையில், ''பருத்தி ஏழு மாதம் சாகுபடி பயிராகும். எதிர்பார்த்தளவு மழை பெய்ததால், சாகுபடி செய்யப்பட்ட பருத்தி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பருத்தி திருச்செங்கோடு சொசைட்டிக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.