/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இடைக்கால தடை
/
தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இடைக்கால தடை
தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இடைக்கால தடை
தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இடைக்கால தடை
ADDED : ஜூலை 26, 2025 01:32 AM
ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க.,-15, அ.தி.மு.க.,-2, பா.ம.க., ஒன்று என, மொத்த, 18 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணை தலைவராக ராஜாவும் உள்ளனர். இந்நிலையில் தலைவருக்கு எதிராக, துணை தலைவர் உள்பட, தி.மு.க.,-அ.தி.மு.க.,-பா.ம.க., கவுன்சிலர்கள் என, 17 பேர் செயல் அலுவலர் சண்முகத்திடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர்.
இதையேற்று, கடந்த, 24ல் டவுன் பஞ்., அலுவலகத்தில் தலைவர் லட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என செயல் அலுவலர் சண்முகம் கவுன்சிலர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், ப.வேலுார் டவுன் பஞ்., தகவல் பலகையில் அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றை, செயல் அலுவலர் சண்முகம் உத்தரவுப்படி ஒட்டப்பட்டிருந்தது. அதில், 'ப.வேலுார் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில், கடந்த, 24ல் நடைபெற இருந்த டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான மன்றகூட்டம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இடைக்கால தடை விதித்து, மன்ற கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மன்ற கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.