/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு துவக்கப்பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாட்டம்
/
அரசு துவக்கப்பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாட்டம்
அரசு துவக்கப்பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாட்டம்
அரசு துவக்கப்பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 01:30 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சர்வதேச புலிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் சொர்ணதீபம் பேசுகையில்,'' மாணவ, மாணவியரிடம், தேசிய விலங்கு புலிகளின் பாதுகாப்பு பற்றியும், புலிகளை அழிவில் இருந்து மீட்க காடுகளை பாதுகாப்போம். புலிகள் மட்டுமின்றி வன உயிரினங்கள் இருந்தால் தான் காடுகள் இருக்கும். காடுகள் இருந்தால் தான் மழை கிடைக்கும். எனவே ஒவ்வொரு மாணவரும் காடுகள், வன உயிரின பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி ஏற்க வேண்டும். மரங்களை வெட்டக்கூடாது, இயற்கையை பாதுகாக்க வேண்டும். இதனால் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்,'' என்றார்.இதையடுத்து தலைமையாசிரியர் மெஜலா, இந்தியாவின் தேசிய விலங்கு புலிகளின் சிறப்பை குறித்து, மாணவ, மாணவியருக்கு எடுத்து கூறினார்.