/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்வதேச யோகா தின விழிப்புணர்வு பேரணி
/
சர்வதேச யோகா தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 22, 2025 12:56 AM
நாமக்கல், சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் துவங்கிய பேரணியை, கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி துவக்கி வைத்தார். மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன், கோகுல்நாதா மிஷன் இயற்கை மருத்துவமனை இயக்குனர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனை முன் துவங்கிய பேரணி, மணிக்கூண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், திருச்சி சாலை வழியாக சென்று, மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது. மாவட்ட யூத் ரெட்கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி திட்ட அலுவலர் சந்திரசேகரன், கல்லுாரி மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு உதவி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மாணவர்கள் இடையே யோகா மற்றும் தியான பயிற்சிகளின் நன்மைகள் குறித்தும், பல்வேறு வகையான யோகா பயிற்சிகளை பற்றியும் செய்முறை மூலம் விளக்கினார்.