/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
/
அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 12:27 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி, அமைப்புகள் சார்பில், சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.மனவளக்கலை மன்றம் மற்றும் அறக்கட்டளை, வாகர்ஸ் சங்கம் சார்பில், சர்வதேச யோகா தினம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
ஓய்வு பெற்ற சேலம், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். மனவளக்கலை மன்ற தலைவர் சரஸ்வதி வரவேற்றார். ஆழியாறு விரிவாக்க இயக்குனர் தங்கவேலு, ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அறங்காவலர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பல்வேறு யோகாசனம் செய்யப்பட்டது.* சேலம் மண்டல தமிழ்நாடு என்.சி.சி., விமானப்படை, 5ம் பிரிவு சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற சர்வதேச யோகா தின விழா, நாமக்கல் மலைக்கோட்டையில் நடந்தது. குரூப் கேப்டன் முருகானந்தம் தலைமை வகித்தார். சுற்றுலா மற்றும் கலாசார ஆர்வலர் பிரணவகுமார் முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அகிலா யோகா தினத்தின் முக்கியத்துவம், நன்மைகள் குறித்து பேசினார். அதில், பல்வேறு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, என்.சி.சி., அதிகாரிகள் சதாசிவம், பெரியசாயபு, மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.* அப்துல்கலாம் நண்பர்கள் குழு சார்பில், சேந்தமங்கலம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமையாசிரியர் சிவகாமி தலைமை வகித்தார். நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். முதன்மை மருத்துவர் ஜெயந்தி, நோயில்லாமல் வாழ்வதற்கு யோகா கலை பயன்படுகிறது என்பதை குறித்து விளக்கினார். சித்த மருத்துவர் மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.* நாமக்கல் அறிஞர் அண்ணா கலை கல்லுாரியில் நடந்த விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், யோகா பயிற்சி செய்முறை விளக்கம் அளித்தார். ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை யோகா இயற்கை மருத்துவ வாழ்வியல் பிரிவு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், சர்வதேச யோகா விழிப்புணர்வு பேரணி, நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் - மோகனுார் சாலை, பழைய மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய பேரணியை, மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.பேரணியில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவியர், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் உள்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் குணசேகரன், கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராசு, பேராசிரியர் வெஸ்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.