/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொள்ளையடித்ததாக நாடகம்உறவினர்களிடம் விசாரணை
/
கொள்ளையடித்ததாக நாடகம்உறவினர்களிடம் விசாரணை
ADDED : டிச 15, 2024 01:22 AM
சேந்தமங்கலம், டிச. 15-
கொல்லிமலை, தேவனுார் நாடு பஞ்., பரியூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 55; விவசாயி. இவர் கடந்த, 12ல், '5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் புகுந்து, என்னையும், என் மனைவியையும் கட்டிப்போட்டு, 50 பவுன் நகை, 7 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக' போலீசாரிடம் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த வாழவந்தி நாடு போலீசார், அவரிடமும், அவரது மனைவிகள் பூங்காவனம், சரோஜாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது தங்கராஜ் நாடகமாடுவது தெரியவந்தது. இதையடுத்து, அவரை வீட்டிற்கு அனுப்பிய போலீசார், மீண்டும் நேற்று காலை, தங்கராஜ், அவரது மகள் சர்மிளா, மருமகன் சபரிராஜன், மாமனார் நடராஜன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.