/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விமான படைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
விமான படைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜன 22, 2024 12:26 PM
நாமக்கல்: 'விமான படையில், 4 ஆண்டுகள் பணிபுரிய, 'அக்னி வீர்' தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதி உள்ளவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய விமான படையில், 4 ஆண்டுகள் அக்னிவீர் திட்டத்தில் பணிபுரிவதற்கு அக்னி வீர்வாயு தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக ஜன., 17 முதல் விண்ணப்பிக்கலாம். மார்ச், 17 முதல் இத்தேர்வு நடக்கிறது. பிறந்த தேதி, 2004 ஜன., 2 முதல் 2007 ஜூலை, 2க்குள் இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண், பெண்ணாக இருக்க வேண்டும். 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடப்பிரிவில் பயின்றவர்கள் அல்லது டிப்ளமோ இரண்டு வருட வொக்கேஷனல் படிப்பு பயின்றவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான பாடத்திட்டம், மாதிரி தாள்கள் agnipathvayu.cdac.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இத்தேர்வு குறித்த விபரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். அல்லது அலுவலக தொலைபேசி எண், 04286--222260 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.