/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2009-2018 வரை பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் சான்றிதழ் பெற அழைப்பு
/
2009-2018 வரை பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் சான்றிதழ் பெற அழைப்பு
2009-2018 வரை பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் சான்றிதழ் பெற அழைப்பு
2009-2018 வரை பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் சான்றிதழ் பெற அழைப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:18 AM
நாமக்கல், 'கடந்த, 2009 முதல், 2018 வரை, பத்தாம் வகுப்பு முடித்து அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள், மூன்று மாதங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, நாமக்கல் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட இடைநிலை தேர்வு மையங்களில், மார்ச், -2009 முதல், செப்., -2018 வரையிலான பத்தாம் வகுப்பு தேர்வுகளில், தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அம்மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டன. அவ்வாறு மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களின் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், தற்போது இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு, தனித்தேர்வர்கள் கோரும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின் மேற்கண்ட பருவங்களுக்கான, பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட உள்ளன. அதனால், மேலே குறிப்பிட்ட பருவங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள், இந்த அறிவிப்பு வெளியிடும் நாளில் இருந்து, மூன்று மாதங்களுக்குள் இந்த அலுவலகத்தை அலுவலக பணி நாட்களில் வேலை நேரத்தில், நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்துடன், 45 ரூபாய்- மதிப்புள்ள அஞ்சல்வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறை மற்றும் தேர்வுக்கூட அனுமதி சீட்டின் அச்சு பகர்ப்பு நகலை, இவ்வலுவலகத்திற்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இந்த இறுதி வாய்ப்பை தனித்தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.