/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலப்பட வெல்லம் 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கல்
/
கலப்பட வெல்லம் 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கல்
ADDED : ஜன 06, 2024 01:11 PM
ப.வேலுார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ப.வேலுார் அருகே பிலிக்கல்பாளையம், அண்ணா நகர் மற்றும் ஜேடர்பாளையத்தில், வெல்லம் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இங்கு, சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிப்பதாக புகார் எழுந்தது. இதனால் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அருண் தலைமையில், கபிலர்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அலுவலர்கள், ஜேடர்பாளையம் பகுதியில் செயல்படும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், 16 ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டன. வெல்ல பாகு தயாரிக்கும் இடம், பணியாளர் சுத்தம், சர்க்கரை இருப்பு, வேதிப்பொருட்கள் இருப்பு போன்றவை தணிக்கை செய்யப்பட்டன. அப்போது, சர்க்கரை, வேதிப்பொருட்கள் கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்த, 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், தரம் குறைவாக தயாரிக்கப்பட்ட வெல்லம், நாட்டு சர்க்கரை, 12,000 கிலோ சர்க்கரை, வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு, லேப் டெஸ்டிற்கு அனுப்பப்பட்டன.