/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானம்
/
ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானம்
ADDED : செப் 09, 2024 06:50 AM
ராசிபுரம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், ராசிபுரம் வட்ட கூட்டம் நாமகிரிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியத்தை, தமிழகத்தின் இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியருக்கும் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தையே அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின், 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, டிட்டோஜாக் மாநில அமைப்பு, 10ம் தேதி மேற்கொள்ளும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.