/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
/
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 15, 2024 01:09 AM
நாமக்கல்: தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் நேற்று நடந்தது.
அப்போது, சம்மேளன தலைவர் செல்ல ராசா-மணி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகள் மற்றும் அரசு மணல் விற்பனை கிடங்குகளில் முறைகேடு நடந்-துள்ளதாக, 2023 செப்., 23ல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்-பட்டுள்ளன. அதனால், மணல் லோடு எடுப்பதற்கு என்றே வடிவ-மைக்கப்பட்ட, 55,000க்கும் மேற்பட்ட லாரிகள், வேலை-வாய்ப்பை இழந்துள்ளன.அதன் காரணமாக, 55,000 லாரி உரிமையாளர்கள், ஒரு லட்சத்-திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் வேலைவாய்ப்பை இழந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் குவா-ரிகள் இயங்காததால், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிக-ளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை மணல் எம்.சாண்டை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்-ளனர்.மணல் லாரி உரிமையாளர்கள், டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தமிழக முதல்வர் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்-பட்ட அனைத்து அரசு மணல் குவாரிகளையும், மாநில சுற்றுச்-சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த, 26 புதிய குவாரிக-ளையும் சேர்த்து திறக்க வேண்டும்.அரசு மணல் குவாரிகளை திறக்ககோரி தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் லாரிகளை, ஒரு இடத்தில் நிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட உள்ளோம், அது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.