/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ-ஜியோ' உண்ணாவிரதம்
/
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ-ஜியோ' உண்ணாவிரதம்
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ-ஜியோ' உண்ணாவிரதம்
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ-ஜியோ' உண்ணாவிரதம்
ADDED : டிச 14, 2025 08:25 AM

நாமக்கல்: பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலி-யுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும், மாட்ட தலைநகரங்-களில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த போராட்டத்-திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனி-யப்பன், சங்கர், அருட்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்-பாளர்கள் முருகேசன், வீராசாமி, அங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்-வாகிகள் நேரு, ராமு, பிரகாஷ், செல்வேந்திரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர்.தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்-டத்தை உடனே அறிவிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு அச்சுறுத்தலில் இருந்து விலக்க-ளித்து, தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நட-வடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இடைநிலை, முதுகலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும், 90 சத-வீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், பள்ளி கல்வித்துறை அரசாணை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அர-சாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள், பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்-களை உடனே நிரப்ப வேண்டும்என்பன உள்-ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

