ADDED : ஜூலை 13, 2025 02:09 AM
ப.வேலுார், பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில், சனி, புதன் கிழமைகளில் விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,340 ரூபாய்க்கும், அச்சுவெல்லம், 1,320 -ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த வாரம் உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,400 ரூபாய்க்கும், அச்சுவெல்லம், ஒரு சிப்பம், 1,380 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில், உருண்டை வெல்லம், 4,000 சிப்பங்களும், அச்சு வெல்லம், 1,500 சிப்பங்களும் வரத்தாகின. மொத்தம், 77 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

