/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'வீரத்திற்கு ஜல்லிக்கட்டு; விவேகத்திற்கு கோழிப்பிடி'
/
'வீரத்திற்கு ஜல்லிக்கட்டு; விவேகத்திற்கு கோழிப்பிடி'
'வீரத்திற்கு ஜல்லிக்கட்டு; விவேகத்திற்கு கோழிப்பிடி'
'வீரத்திற்கு ஜல்லிக்கட்டு; விவேகத்திற்கு கோழிப்பிடி'
ADDED : ஜன 16, 2025 06:39 AM
திருச்செங்கோடு: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு நந்தவன தெருவில் பெண்கள், குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் கோழிப்பிடிக்கும் நவீன ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில், ஒரு வட்டம் வரைந்து, அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைத்து அவர்களின் கண்கள் கட்டப்படும். பின், ஒரு காலில் கயிறு கட்டப்படும்; அந்த கயிற்றின் மற்றொரு முனையில் கோழியின் கால் கட்டப்பட்டிருக்கும்.
வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் கோழியை குறிப்பிட்ட நேர அளவிற்குள் பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்குள், வட்டத்தை தாண்டாமல் கோழிப்பிடிப்பவர்கள் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்படும்.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:வீரத்திற்கு காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால், விவேகத்திற்கு கோழிப்பிடிக்கும் நவீன ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது. பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். கவலைகளை மறந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஒரு வாய்ப்பாக அமைகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

