ADDED : ஏப் 03, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே திடுமல் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 22, ஜே.சி.பி., டிரைவர். இவர் வேலைக்கு சென்ற போது, 15 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.இது குறித்து நல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சக்திவேலை கைது
செய்தனர்.
