/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தில் முதியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு
/
குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தில் முதியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு
குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தில் முதியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு
குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தில் முதியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு
ADDED : பிப் 21, 2025 07:26 AM
ராசிபுரம்: குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், முதியவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
ராசிபுரம் அடுத்த மங்களபுரத்தை சேர்ந்த இருசப்பன், 70, அளித்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் பாக சாசனம் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் கூறியதாவது: நானும் எனது மனைவி ராசாத்தியும், ராசிபுரம், மங்களபுரத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் என் மகன்களுக்கு பூர்வீக சொத்துகளை பாகம் பிரித்து கொடுத்தோம். ஆனால் சொத்துகளை பெற்றுக் கொண்டவர்கள் என்னையும், மனைவியையும் பராமரிக்கவில்லை. மேலும் அன்றாட தேவைகளுக்கும், உணவிற்கும் நாங்கள் கஷ்டப்பட்டு வந்தோம்.
தனது மகன்கள் இருவரும், பூர்வீக சொத்துகளை பாகம் பிரித்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கும் தனது மனைவிக்கும் எந்த பராமரிப்பும் செய்யவில்லை. எனவே மகன்களை அழைத்து விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மனு அளித்தோம்.
நாங்கள் அளித்த மேல்முறையீட்டு மனுவின் பேரில், மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு, உடனடியாக வாழப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்த பாகசாசன ஆவணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, பாக சாசன ஆவணம் ரத்து செய்யப்பட்டது. தற்போது எங்களது சொத்தை நானும், என் மனைவியும் பயன்படுத்தி மகன்களின் உதவியின்றி நல்ல முறையில் வாழ முடியும். இவ்வாறு கூறினார்.

