/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீதிமன்ற பணி என்பது சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு ஆற்றும் தொண்டு: ஐகோர்ட் நீதிபதி
/
நீதிமன்ற பணி என்பது சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு ஆற்றும் தொண்டு: ஐகோர்ட் நீதிபதி
நீதிமன்ற பணி என்பது சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு ஆற்றும் தொண்டு: ஐகோர்ட் நீதிபதி
நீதிமன்ற பணி என்பது சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு ஆற்றும் தொண்டு: ஐகோர்ட் நீதிபதி
ADDED : ஜூலை 27, 2025 01:39 AM
நாமக்கல் :''நீதிமன்ற பணி என்பது சமுதாயத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஆற்றும் தொண்டு,'' என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், நாமக்கல் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான இளந்திரையன் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 8.70 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நீதிபதிகளுக்கான அரசு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கான அடிக்கல்நாட்டு விழா, நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி குருமூர்த்தி வரவேற்றார். சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதியும், நாமக்கல் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான இளந்திரையன், குடியிருப்பு கட்டு மான பணிக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:
நீதிமன்ற பணியை சிறப்பாக செய்வதற்கு, நீதித்துறை அலுவலர்கள் முதல் நீதிபதிகள் வரை மிகவும் கடுமையாக உழைத்தால் தான், வழக்குகளை எளிதில், விரைவில் தீர்க்க முடியும். அதற்கு அமைதியான, பாதுகாப்பான குடியிருப்பு அவர்களுக்கு தேவை.
அதிகாரத்தின் மீது மதிப்பும், பொறுப்பும் கொண்ட நாமக்கல் மாவட்ட நீதிமன்றம், வக்கீல்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் தான், வழக்குகள் விரைவில் தீர்க்க முடியும். நீதிமன்ற பணி என்பது, பொதுமக்களிடையே சமுதாயத்திற்காக நாம் ஆற்றும் தொண்டு என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நீதித்துறையினர் அனைவரும், தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கி, நீதி பரிபாலனம் நடைபெற, நீதிமன்ற நடுவர்களுக்கும், நீதிபதிகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதி சண்முகப்பிரியா, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, எஸ்.பி., விமலா, மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.