/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
/
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
ADDED : டிச 03, 2024 01:27 AM
ப.வேலுார், டிச. 2--
ப.வேலுார், திருஞானசம்பந்தர் மடாலயம் மற்றும் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை
சார்பில், கலிக்கம் கண்சிகிச்சை முகாம், நேற்று நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, சித்தா டாக்டர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ''உடம்பில் உள்ள நோய்களை, மூலிகை சாற்றை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்குவது கலிக்கம் சிகிச்சை.
இதனால் கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், கண்புரையை சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்பு, தோல் வியாதி, நரம்பு பலவீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில், அசைவம் சாப்பிடக்கூடாது.
ஐ.ஒ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும், இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை,'' என்றார்.
மாதந்தோறும், 1, 16 தேதிகளில் ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்திலும், ஒவ்வொரு மாதமும், 25ல் ப.வேலுார் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்திலும், கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.