/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சட்டசபை தேர்தலில் கனிமொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும்: தங்கமணி
/
சட்டசபை தேர்தலில் கனிமொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும்: தங்கமணி
சட்டசபை தேர்தலில் கனிமொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும்: தங்கமணி
சட்டசபை தேர்தலில் கனிமொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும்: தங்கமணி
ADDED : ஏப் 13, 2025 04:16 AM
நாமக்கல்: ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,-எம்.பி., கனிமொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும்; இ.பி.எஸ்., முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என,
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்-பட்ட எருமப்பட்டியில், நேற்று தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி, கட்சியினருடன் வீதி வீதியாக சென்று, தி.மு.க., அரசின் அவல நிலையை எடுத்-துக்கூறி, துண்டு பிரசுரம் வழங்கி, அ.தி.மு.க.,விற்கு ஆதரவு திரட்டினார்.அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, மாவட்டம் முழுவதும் திண்ணை பிரசாரம் மூலம், வீடு வீடாக சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம்.
தி.மு.க., ஆட்சியின் அவலநிலை குறித்து, தேர்தல் நடக்கும் வரை திண்ணை பிரசாரம் நடத்தப்படும். அமைச்சர் பொன்முடி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியை, தமிழகம் முழுவதும் வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தது குறித்து, தி.மு.க.,-எம்.பி., கனிமொழி தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது, ''வரும், 2026 சட்டசபை தேர்தலில், கனி-மொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும். இ.பி.எஸ்., முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என, தங்கமணி கூறினார்.

