ADDED : பிப் 17, 2025 03:42 AM
நாமக்கல்: தமிழ்நாடு கியோகுஷின் காய்கான் கராத்தே பள்ளி சார்பில், கராத்தே தேர்வு மற்றும் தற்காப்பு விழிப்புணர்வு முகாம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. தலைமை பயிற்சியாளர் சென்சாய் உதயகுமார் தலைமை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அவர்களுக்கு, சுய பாதுகாப்பு, மனித ஒழுக்கம், பெண்களின் தற்காப்பு அவசியம் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.மேலும், கராத்தே உத்திகள், பயற்சி முறைகள், யோகா, தியானம் உள்ளிட்ட உடல், மனம் சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, ஆரஞ்ச் பெல்ட் முதல், பிரவுன் பெல்ட் வரை பட்டய தேர்வு நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பட்டயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, உதயா மார்ஷியல் ஆர்ட்ஸ் மாணவர்கள் செய்திருந்தனர்.

