/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருணாநிதி 102வது பிறந்த நாள் விழா தி.மு.க., முன்னோடிகளுக்கு பொற்கிழி

ADDED : ஜூன் 04, 2025 01:30 AM
நாமக்கல், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்த நாள், 'செம்மொழி' நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள செலம்பகவுண்டர் பூங்காவில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த, 120 தி.மு.க., மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் மாவட்ட செயலாளர் பார் இளங்கோவன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம், நகரம், டவுன் பஞ்., உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.