/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அமைச்சர்கள் பேசும் போது மொபைலில் மூழ்கிய கரூர் காங்., வேட்பாளர்
/
அமைச்சர்கள் பேசும் போது மொபைலில் மூழ்கிய கரூர் காங்., வேட்பாளர்
அமைச்சர்கள் பேசும் போது மொபைலில் மூழ்கிய கரூர் காங்., வேட்பாளர்
அமைச்சர்கள் பேசும் போது மொபைலில் மூழ்கிய கரூர் காங்., வேட்பாளர்
ADDED : ஏப் 02, 2024 04:07 AM
கரூர்: கரூரில், இரண்டு அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, காங்., வேட்பாளர் ஜோதிமணி, மொபைல் போனில் மூழ்கியதால், அமைச்சர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர் காங்., வேட்பாளராக சிட்டிங் எம்.பி., ஜோதிமணி போட்டியிடுகிறார். கடந்த, 27ல் கரூர் மனோகரா கார்னர் பகுதியில், கரூர் தொகுதிக்கான, 'இண்டியா' கூட்டணி தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், தொகுதி பொறுப்பாளர் எம்.பி., அப்துல்லா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின், பிரசார வேனில் வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து, அமைச்சர் மகேஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வேட்பாளர் ஜோதிமணி அமைச்சரின் பேச்சை கவனிக்காமல், மொபைல் போனில் மூழ்கி இருந்தார். அவரை தொடர்ந்து, அமைச்சர் சக்கரபாணி பேசியபோதும், வேட்பாளர் ஜோதிமணி மொபைல் போனை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தார். இதனால், தி.மு.க., வினர் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி எதுவும் பேச முடியாமல், அமைச்சர்கள் சக்கரபாணி, மகேஷ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தவித்தனர்.
இது பற்றி தி.மு.க.,வினர் கூறுகையில், ' எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற மிதப்பில் ஜோதிமணி உள்ளார். அதனால் தான் அமைச்சர்கள் பேச்சை கூட கேட்காமல், அலட்சியமாக மொபைல் பார்த்துக் கொண்டிருந்தார். இவரை வெற்றி பெற வைக்க தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளதை நினைத்தால், காங்., கட்சிக்கு, தி.மு.க., அடிமை போல் நடந்து கொள்கிறதே என நினைக்கும் படி உள்ளது' என்றனர்.

