/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரூர் ஆர்.எம்.எஸ்., தபால் சேவையை திருச்சிக்கு இடமாற்ற வேண்டாம்: எம்.பி., வேண்டுகோள்
/
கரூர் ஆர்.எம்.எஸ்., தபால் சேவையை திருச்சிக்கு இடமாற்ற வேண்டாம்: எம்.பி., வேண்டுகோள்
கரூர் ஆர்.எம்.எஸ்., தபால் சேவையை திருச்சிக்கு இடமாற்ற வேண்டாம்: எம்.பி., வேண்டுகோள்
கரூர் ஆர்.எம்.எஸ்., தபால் சேவையை திருச்சிக்கு இடமாற்ற வேண்டாம்: எம்.பி., வேண்டுகோள்
ADDED : நவ 21, 2024 01:21 AM
கரூர் ஆர்.எம்.எஸ்., தபால் சேவையை திருச்சிக்கு
இடமாற்ற வேண்டாம்: எம்.பி., வேண்டுகோள்
நாமக்கல், நவ. 21-
'கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இயங்கி வரும், ஆர்.எம்.எஸ்., தபால் மையத்தை திருச்சிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது' என, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், தபால் துறை இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, எம்.பி., அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில், தபால் துறை சார்பில் இயங்கும், ஆர்.எம்.எஸ்., என்ற ரயில்வே மெயில் சர்வீஸ் தபால் வசதி இல்லை. கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 1980ல் இருந்து, ஆர்.எம்.எஸ்., சேவை இயங்கி வருகிறது. இந்த மையம் மதியம், 2:20 மணியில் இருந்து, அதிகாலை, 6:00 மணி வரை இயங்கும்.
நாமக்கல், மோகனுார், கபிலர்மலை, பரமத்தி, ப.வேலுார் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கோழிப்பண்ணை, முட்டை, லாரி, ரிக் போன்ற தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், போலீசார், வக்கீல்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்டோர், தங்களின் அவசர பதிவு தபால்கள், ஸ்பீட் போஸ்ட், ஸ்பீட் பார்சல் போன்ற தேவைக்காக, கரூர் ரயில் நிலையத்தில் உள்ள
ஆர்.எம்.எஸ்., சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, கரூர் ஆர்.எம்.எஸ்., சேவை மையத்தை, திருச்சி ஆர்.எம்.எஸ்., உடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு நடந்தால், நாமக்கல் பகுதியில் உள்ளவர்கள், அவசர நேரங்களில் ஆர்.எம்.எஸ்., சேவைக்காக, சேலம் அல்லது ஈரோடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், கரூரில் உள்ள ஆர்.எம்.எஸ்., சேவை மையத்தை திருச்சிக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட்டு, கரூர் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தை, 'இன்ட்ரா சர்க்கிள் ஹப்' (ஐ.சி.எச்.,) ஆக மேம்படுத்தி, தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.