sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரூர் சிலவரி செய்திகள்

/

கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்


ADDED : பிப் 25, 2024 04:07 AM

Google News

ADDED : பிப் 25, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரி வசூல் குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட வார்டுகளில், வரி வசூல் குறித்த விழிப்புணர்வு பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 15 வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. டவுன் பஞ்சாயத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்து வரி, வணிக வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தி, அதற்கான ரசீது பெற்று கொள்ளுமாறு டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

புரவிபாளையம்அரசு பள்ளியில்

அறிவியல் கண்காட்சி

கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் அருகில் புரவிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியை அமலி தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவியரின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியரின் சேர்க்கைக்கு பெற்றோர் அனைவரும் ஒத்துழைப்பு தருவோம் என இந்த நிகழ்வில் உறுதி மொழியேற்று கொண்டனர்.

தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கவுரி, கவுண்டம்பாளையம் பள்ளி தலைமையாசிரியர் பரணிதரன், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உள்பட பலர்

பங்கேற்றனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடந்து சென்றவர் பலிஅரவக்குறிச்சி,-

அடையாளம் தெரியாத வாகனம் மோதி, நடந்து சென்றவர் பலியானார்.

அரவக்குறிச்சி அருகே மணல்மேடு பஸ் நிறுத்தம் அருகே, நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் அடையாளம் தெரியாத, 40 - 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கரூர் - திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்றவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதி மக்கள், தாளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us