sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரூர் சிலவரி செய்திகள்

/

கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்


ADDED : மார் 18, 2024 02:59 AM

Google News

ADDED : மார் 18, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேர்தல் அறிவிப்பு எதிரொலி

மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

கரூர்: தேர்தல் நடத்தை விதிமுறையால், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடக்க இருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நடக்கும் நாள், வேட்புமனு தாக்கல், ஓட்டு எண்ணிக்கை நாள் என தேர்தல் அறிவிப்புகளை, தேர்தல் கமிஷன், நேற்று முன்தினம் வெளியிட்டது. தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கரூர் மாவட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் நடத்தை விதிமுறையால், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மட்டுமல்லாமல், விவசாயிகள் குறைதீர் கூட்டம், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட குறை கேட்பு கூட்டங்களும், தற்காலிமாக ரத்து செய்யப்படுகின்றன. கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரவுண்டானாவில் அடிக்கடி

விபத்து: கண்காணிப்பு தேவை

கரூர்: வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் அடிக்கடி விபத்து நடப்பதால், போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர்- - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வேலாயுதம்பாளையம் உள்ளது. இதற்கு சர்வீஸ் சாலையில் பிரிந்து வேலாயுதம்பாளையம் செல்கிறது. அங்கு ரவுண்டானா வழியாக நாள்தோறும் நான்குபுறமும் ஏராளமான டூவீலர்கள், கார்கள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. சிலர் போக்குவரத்து விதிமுறை மீறி செல்வதால், முட்டி மோதிக்கொண்டு விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர். அடையாளம் தெரியாத வாகனங்களால், ரவுண்டானா சுவர்களும் சேதமடைந்துள்ளன. ரவுண்டானாவை சீரமைப்பதுடன், வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது.

தென்னிலை அருகே ரூ.1.30 லட்சம்

பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்

அரவக்குறிச்சி-

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள், நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்தன. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வைரமடை சோதனை சாவடியில், தென்னிலை போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோயம்புத்துாரில் இருந்து கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த ஹேமலதா என்பவரின் காரை சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட, 1.30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

சுற்றித்திரியும் கால்நடைகள்

வாகன ஓட்டிகள் அச்சம்

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதியில் ஆடு, மாடுகள் சுற்றித்திரிகின்றன. கால்நடை வளர்க்கும் பொதுமக்கள், தாங்கள் வீட்டிலேயே முழுமையாக கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்காமல் சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். தவிர, சாலையில் சுற்றித்திரியும் ஆடுகள், இப்பகுதியில் பூ, பழம், காய்கறி கடைகளுக்கு சென்று அவற்றை தின்பதால் வியாபாரிகள் நஷ்டத்துக்குள்ளாகின்றனர். இதேபோல் ஆங்காங்கே மாடுகளும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றன.

எனவே, கால்நடைகளை சாலையில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us