ADDED : மே 30, 2026 05:15 AM
நாமக்கல்:தமிழகத்தில், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் தனியரசு உத்தரவுப்படி, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட இளைஞர் பேரவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கவுரிசங்கர் தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தெற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், த.வெ.க., கட்சி தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டு, தற்போது விவசாயிகளை ஏமாற்றியுள்ள த.வெ.க., அரசைக் கண்டித்தும், விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான கொங்கு இளைஞர்யினர் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.
