/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறிப்பு: 5 பேர் கைது
/
நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறிப்பு: 5 பேர் கைது
நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறிப்பு: 5 பேர் கைது
நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறிப்பு: 5 பேர் கைது
ADDED : ஜன 06, 2024 01:13 PM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, டி.வி.எஸ்., மேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், 32; நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த, டிச., 12 மதியம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த, 6 பேர் கொண்ட கும்பல் கோவிந்தனை கடத்திக்கொண்டு, ஓடப்பள்ளி தடுப்பணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு, கோவிந்தனை கடுமையாக தாக்கி, 5,000 ரூபாய் பறித்துக்கொண்டு, அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசில், கோவிந்தன் புகாரளித்தார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு காவிரி பாலத்தில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூவீலரில் வந்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 21, செந்தில்குமார், 27, குமரேசன், 23, கருவாயன் (எ) மணிகண்டன், 19, ராகுல் 20, ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள், 5 பேரையும் கைது செய்து, தலைமறைவாக உள்ள பகத்சிங்கை தேடி வருகின்றனர்.