ADDED : ஆக 25, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்; நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள செம்மேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இந்த கன மழை, ஒரு மணி நேரத்-திற்கும் மேலாக நீடித்தது. இதனால் கொல்லிம-லையில் மட்டும், 43 மில்லி மீட்டர் மழை பதிவா-னது. இதனால் சோளக்காடு அருகே உள்ள கொல்-லிமலையில் காவல் தெய்வமான நாச்சியம்மன் கோயிலில் உள்ள சிற்றோடையில் மழைநீர் வெள்ளப் பெருக்காக மாறி பாய்ந்து சென்றது.
அந்த வெள்ளை நீரானது அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று, கொண்டை ஊசி வளைவுகளில் அருவிபோல் கொட்டியது. இந்த எதிர்பாராத மழையால், கொல்லிமலையில் உள்ள மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
