/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொங்கு திருப்பதி கோவிலை வழிபாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும்: ஆர்ஜூன் சம்பத்
/
கொங்கு திருப்பதி கோவிலை வழிபாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும்: ஆர்ஜூன் சம்பத்
கொங்கு திருப்பதி கோவிலை வழிபாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும்: ஆர்ஜூன் சம்பத்
கொங்கு திருப்பதி கோவிலை வழிபாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும்: ஆர்ஜூன் சம்பத்
ADDED : அக் 01, 2024 07:08 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியில் உள்ள கொங்கு திருப்பதி கோவில், 20 ஆண்டுக்கு மேலாக உள்ளது. நாமக்கல், ஈரோடு, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்வர். புரட்டாசி சனிக்கிழமையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும்.
இந்நிலையில் இக்கோவில், வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டபட்டுள்ளதால், கோவில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். மீட்கப்பட்ட நிலத்தை ஏலம் விட வேண்டும். ஏலம் யாரும் எடுக்காவிட்டால், அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்த, கொங்கு திருப்பதி கோவிலை, ஈரோடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கையகப்படுத்தினர். அதை தொடர்ந்து கோவில் முன்புறம் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இந்நிலையில், கொங்கு திருப்பதி கோவிலை, நேற்று ஹிந்து மக்கள் கட்சி தலைவர் ஆர்ஜூன் சம்பத் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது: பள்ளிப்பாளையம் கொங்கு திருப்பதி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். நில பிரச்னையால், கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால், புரட்டாசி சனிக்கிழமையில் வழிபாட்டிற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படி ஒரு கோவிலை பூட்டி வைத்திருப்பதே ஆகம விதிமுறைக்கு ஏதிரானது. பெரிய பாவம், அதனால் இந்த கோவிலை உடனடியாக திறக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.இவ்வாறு அவர் கூறினார்.