ADDED : செப் 08, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்; கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவையொட்டி, சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில், ஆவணி மாதத்தில் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் விழா கொண்டா-டப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த, 3 நாட்க-ளாக கிருஷ்ணன் சுவாமிக்கு பால், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கா-ரத்தில் தீபாராதனை நடந்தது. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று கிருஷ்ண சுவாமி, குதிரை வாகனத்தில் பூக்கள் அலங்கரித்து மேள தாளங்கள் முழங்க சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. நிறைவாக பொட்-டணம் கிராமத்தில் இருந்து சேந்தமங்கலம் பெருமாள் கோயிலை சுவாமி சென்றடைந்தது. கோயிலுக்கு வந்திருந்த
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
