/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கந்தசாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
/
கந்தசாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED : அக் 11, 2025 01:21 AM
மல்லசமுத்திரம், அக். 11
புரட்டாசி கிருத்திகையையொட்டி, சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை வரை சுவாமிக்கு பால், விபூதி, சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
கோவில் முழுவதும் மலர்கள், காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில் உட்பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வாைனையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதேபோல், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில், ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில், ராஜா சுவாமிக்கு, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.