கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரி பட்டமளிப்பு விழா
கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : டிச 16, 2024 03:12 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரியின், 26வது பட்டமளிப்பு விழா, கே.எஸ்.ஆர்., அரங்கத்தில் நடந்தது. கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் பட்ட-மளிப்பு விழாவை துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். டில்லி தலைமை ஜவுளி அமைச்சக இணை செயலர் ராஜீவ் சக்சேனா பேசுகையில், ''மாணவர்கள் திறமைகளை மேம்படுத்தி கொள்-ளவும், சமுதாயத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து புதிய தொழில்-நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார். இந்திய அரசு துாள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மைய இயக்குனர் விஜய் பேசு-கையில், ''இளம் பட்டதாரிகள், உயர்கல்வி, வேலை பெறுதல், ஸ்டார்ட்- அப் மற்றும் தொழில் முனைவோர் முயற்சிகளில் பங்-கேற்று முன்னேற்றம் அடைய வேண்டும்,'' என்றார். 2 பிஎச்.டி., பட்டதாரிகள் மற்றும் 31 தரவரிசை ரேங்க் பெற்றவர்கள் உட்பட, 684 பட்டதாரிகளுக்கு பட்டச்சான்று வழங்கினர். துறைத்தலை-வர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.
