/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் காவிரி ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
/
குமாரபாளையம் காவிரி ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
குமாரபாளையம் காவிரி ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
குமாரபாளையம் காவிரி ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
ADDED : ஆக 07, 2024 07:28 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சின்னப்ப நாயக்கன்பாளையம், மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி, 75.
இவரது கணவர் பழனியப்பன், 80. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மகனுடன் வசித்து வந்த கருப்பாயி, நேற்று காலை, 6:30 மணிக்கு, வீட்டை பெருக்கி அங்கிருந்த குப்பையை எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றின் அருகே கொட்டச்சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக காவிரியாற்றில் தவறி விழுந்தார். நீரோட்டம் அதிகமிருந்ததால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கருப்பாயி, கலைமகள் வீதியில் உள்ள பொன்னியம்மன் சந்து உடற்பயிற்சி நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாசில்தார் சிவக்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் யாரும் செல்லா முடியாதபடி, தடுப்பு வேலி அமைக்க உத்தரவிட்டார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.