/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையத்தில் கும்பாபிஷேக விழா
/
குமாரபாளையத்தில் கும்பாபிஷேக விழா
ADDED : மார் 25, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம் : குமாரபாளையம், காவேரி நகர் ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், பரிவார தெய்வங்கள் பஞ்ச சக்தி, கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 21ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
அதை தொடர்ந்து, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.யாகசாலை பூஜை, கும்பாபிஷேக விழாவை, ஈரோடு ஆதீனம் பாலாஜிசிவம் மற்றும் அவரது குழுவினர் நடத்தினர்.

