/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆனந்தாஸ்ரமத்தில் கும்பாபிஷேக ஆண்டு விழா
/
ஆனந்தாஸ்ரமத்தில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : ஜன 20, 2025 06:55 AM
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை, ஏ.ஜி.பி.ஆர்., நகர் பகுதியில் ஆனந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. 1942ம் ஆண்டு ஆனந்தாஸ்ரமம் அமைக்கப்பட்டாலும், 1989ல் தான் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 2001ல், 2வது கும்பாபிஷேகம், கடந்தாண்டு ஜனவரியில், 3வது கும்பாபிஷேகம் நடந்தது. இதன் முதலாம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதில், பெத்தண்ண சுவாமிகள் சந்ததியினர், 100க்கும் மேற்பட்டோர் யாகம் வளர்த்தனர்.
நேற்று அதிகாலை தொடங்கிய பூஜை மதியம் முடிவடைந்தது. தொடர்ந்து பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 5 தலைமுறையை சேர்ந்த சந்ததியினர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து, குழு போட்டோ எடுத்துக்கொண்டனர். ஆனந்தாஸ்ரமத்தின் கும்பாபிஷேக முதலாமாண்டு மலர் வெளியிடப்பட்டது.