/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புடவைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
புடவைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 09, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, ஓலைப்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள புடவைக்காரி அம்மன் கோவில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, புடவைக்காரி அம்மன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஓலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.