/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேக விழா
/
சேந்தமங்கலம் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 17, 2025 02:05 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற மேல்மருவத்துார் ஆதிபரா சக்தி சித்தர் பீடம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. கடந்த, 13ல் குருபூஜை விழா நடந்தது. அதை தொடர்ந்து கோபுர கலச பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, முதல் காலயாக பூஜையும், மாலை, 6:00 மணிக்கு இரண்டாம்கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.
காலை, 9:00 மணிக்கு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் மருவூர் சின்னவர், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.