/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேக விழா
/
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேக விழா
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேக விழா
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 31, 2025 04:26 AM
நாமக்கல்:நாமக்கல்
மாவட்டம், வள்ளிபுரம் கிராமத்தில் வேதநாயகி அம்பாள் சமேத
தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வரும் செப்.,
4ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதையொட்டி, இன்று இரவு கிராம
சாந்தி நடக்கிறது. செப்., 2 காலை, காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம்
எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜை
துவங்க உள்ளது. 3 காலை, இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது.
அன்று
மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை துவங்குகிறது. 4 காலை,
நான்காம் கால யாக பூஜை துவங்குகிறது. அன்று காலை, 9:00 மணிக்கு மேல்,
10:30 மணிக்குள் விநாயகர், வேதநாயகி அம்மாள் சமேத தான்தோன்றீஸ்வரர்
மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அன்று மாலை, 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் என, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.