நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார், மோகனுார், பெரமாண்டம்பாளையம் வடபாகத்தில் உள்ள கருந்தோட்டத்தில், மருதையண்ணன், கவுண்டச்சி அம்மன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 2004 ஆக., 26ல், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள், இளநீர் உட்பட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.