/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீதி காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
நீதி காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 07, 2025 02:00 AM
வெண்ணந்தூர், வெண்ணந்துார் அம்மன் கோவில் தெருவில், புதிதாக கட்டப்பட்டுள்ள நீதி காத்த மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, செல்வ விநாயகர், நீதி காத்த மாரியம்மன் ஆகிய சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராஜ விநாயகர் கோவில்...
குமாரபாளையம் அருகே, குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் ராஜ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்த நிலையில், புதுப்பிக்கப்பட்டது. கடந்த, 3ல் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, கணபதி யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பல வகையான யாகங்கள் நடத்தபட்டன.
நேற்று காலை, சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.