/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிடாரி வள்ளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
பிடாரி வள்ளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : பிப் 26, 2024 02:21 PM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நாமக்கல் - பரமத்தி ரோடு வள்ளிபுரத்தில் அமைந்துள்ள பண்ணை குல மற்றும் வெண்டுவன் குல மக்களின் குலதெய்வமான மகா கணபதி, பிடாரி வள்ளியம்மன், சப்தகன்னிமார், கருப்பணார், மதுரை வீரன், சாம்புவன், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, இன்று காலை, 9:15 மணிக்கு மேல், 10:15 மணிக்குள் நடக்கிறது. தொடர்ந்து, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்றிரவு கொங்கு நாட்டின் பாரம்பரியமான சின்னகரசப்பாளையம் கொங்கு ஒயிலாட்ட குழுவினர் வழங்கிய கொங்கு ஒயிலாட்டம், ஸ்ரீஈசன் வள்ளிகும்மி கலை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பண்ணை குல, வெண்டுவன் குல குடிப்பாட்டு மக்கள், திருப்பணி குழுவினர் மற்றும் வள்ளிபுரம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

