ADDED : பிப் 16, 2025 03:53 AM
மோகனுார்: நாமக்கல் மாவட்டம், மோகனுார் போலீஸ் ஸ்டேஷனுக்குட்-பட்ட வளையப்பட்டியில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளி விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்த பிரகாஷ், 28, என்பவர் ஆசிரியராகவும், விடுதி காப்பாளராகவும் பணியாற்றி வந்தார். அவர், விடுதியில் தங்கி உள்ள மாணவ-னுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஜன., 23ல் மாணவனின் பெற்றோர் மோகனுார் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், பள்ளி ஆசிரியரும், விடுதி காப்பாளருமான பிரகாஷ், மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பிரகாசை போக்சோவில் கைது செய்தனர்.
ஆசிரியர் பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டார். அதற்கான நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள பிரகாஷிடம், நேற்று வழங்கப்பட்டது.
