/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை பொருள் கடத்தி சிறையில் உள்ள 2 வாலிபர்களுக்கு 'குண்டாஸ்'
/
போதை பொருள் கடத்தி சிறையில் உள்ள 2 வாலிபர்களுக்கு 'குண்டாஸ்'
போதை பொருள் கடத்தி சிறையில் உள்ள 2 வாலிபர்களுக்கு 'குண்டாஸ்'
போதை பொருள் கடத்தி சிறையில் உள்ள 2 வாலிபர்களுக்கு 'குண்டாஸ்'
ADDED : பிப் 13, 2024 12:17 PM
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில், சிறையில் இருக்கும் வாலிபர்கள் இருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் தினேஷ், 25. சேலம் மாவட்டம், கருப்பூரை சேர்ந்தவர் சதீஷ் என்ற கந்தசாமி, 30, ஆகிய இருவரும், நண்பர்களான முருகேசன், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து, கடந்த வாரம் ராசிபுரத்திற்கு காரில் கஞ்சா கடத்தி வந்தனர். அப்போது, ஆண்டகளூர் கேட் அருகே, ராசிபுரம் போலீசார், 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில், கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த வாகனங்கள், 50 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 4 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தினேஷ், கந்தசாமி மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிய, எஸ்.பி., ராஜேஷ் கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அவர், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய சிறையில் உள்ள அவர்களிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.