/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறுவட்ட சிலம்ப போட்டி குறிஞ்சி பள்ளி சாதனை
/
குறுவட்ட சிலம்ப போட்டி குறிஞ்சி பள்ளி சாதனை
ADDED : ஆக 06, 2025 01:05 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், குறுவட்ட அளவிலான சிலம்ப போட்டி, எருமபட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் நடந்தது. பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
இதில், கலந்து கொண்ட நாமக்கல், காவேட்டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி பள்ளி மாணவ, மாணவியர், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அபிநீத், கனீஷ், நிவாஷினி, கனிஷ்கா ஆகியோர் முதலிடம், மதுாலிகா, பிரவஸ்தி ஆகியோர்,
இரண்டாம் இடமும்; 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஹரிதா, ரித்தீஷ் கண்ணா ஆகியோர், இரண்டாம் இடமும், மிதுலாஸ்ரீ, ரித்தீஷ் அஸ்வின் ஆகியோர், மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, தாளாளர் தங்கவேல், பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர், ஆகியோர் பாராட்டினர்.